பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் மனிதர் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி,நிவின்பாலி போலவே பல்வேறு காலகட்டங்களில் வாழும் பெண்ணாக வருகிறார்.அதற்கேற்ப பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிவின்பாலியின் சகபயணியாக வரும் சூரி,நம்மைத் தவிர மற்ற எல்லோருமே மற்றும் எல்லாமே சாதாரணம் எனும் தற்காலகட்டத்தின் அகம்பாவம், ஆணவத்தின் அடையாள பிரதிநிதியாக இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்,படத்தின் தூணாக இருக்கிறார்.இயக்குநரின் எண்ணத்தை சற்றும் குறையாமல் வெளிப்படுத்திவிட வேண்டுமென்கிற தவிப்புடன் அவருடைய காட்சிப்படுத்தல்கள் அமைந்திருக்கின்றன.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கராஜா, கூடுதல் இசை கொடுத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்,இசைமூலமும் இந்தக்கதையைச் சொல்லியாக வேண்டுமென உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
ஸ்டண்ட் சில்வா,அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் வி.எஸ்.மதிக்கு மிகவும் சவாலான திரைக்கதை.அதை தொய்வின்றி கொடுத்துவிட வேண்டும் என்று முயன்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் ராம்.
உலகம் மனிதர்களுக்கானது மட்டுமன்று நீரிலும், நிலத்திலும் வாழும் ஒட்டுமொத்த உயிர்களுக்கானது என்கிற கருத்தை உரத்துச் சொல்லியிருக்கிறார்.அதைச் சொல்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம்,
திரைக்கலை என்பது காட்சி ஊடகம் என்பதால் சொல்லவேண்டியதை காட்சிகளாகக் காட்டவேண்டும் என்பது அடிப்படை.இந்தப்படத்தில் அதையும் தாண்டி,காட்டப்படுகிற காட்சிகளை பேசப்படுகிற வசனங்களை எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அவரவர் சிந்தனைக்கேற்ப, அவர்களது சமூக நோக்கில் பார்க்கலாம் என்கிற பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறார் ராம்.
தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த கலைப்படைப்புகளின் பட்டியலில்’ ஏழுமலை ஏழுகடல்’ முதலிடத்தில் இடம்பெறும்.