தாமாக முன்வந்து ஆதரித்த ஊடகங்களுக்கு நன்றி நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் மகன் த்ருவ்விக்ரம்

நாயகனாக அறிமுகமான படம்
ஆதித்யா வர்மா
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, இந்தியில் ஷாஹித் கபூர் போன்ற அனுபவம் மிக்க நடிகர்கள் சிறப்பாகக் கையாண்ட கதையை த்ருவ் எப்படி கையாண்டிருக்கிறார் என்ற ஒப்பீடு, இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோதே தொடங்கியது.
திரைக்கதை முழுவதும் இன்றைய இளைய தலைமுறையினர் ரசனைக்கு ஏற்ப படமாக்கப்பட்ட ஆதித்ய வர்மா
கடந்த 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுமையும் வெளியானது
அறிமுக நடிகர் நடித்த படத்திற்கு இப்படி ஒரு ஓபனிங் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு ஆதித்ய வர்மா படத்திற்கு அனைத்து ஏ சென்டர்களில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சென்னை நகரில்முன்னணி நடிகர்கள்
நடிக்கும் படத்துக்கு முதல் நாள் ஆகக்கூடிய வசூலில் 50% இந்த படத்திற்கு இருந்தது தமிழ்சினிமாவில்  பள்ளி-கல்லூரி
மாணவனாக நடிப்பதற்கு
 இப்போதுஹீரோக்கள் இல்லை அந்த குறையை போக்கும் வகையில் ஆதித்யா வர்மா படத்தின் ஹீரோ த்ருவ்
இருப்பதாக தயாரிப்பார்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது 
படைப்பு ரீதியாக ஆதித்யா வர்மா படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதும் வணிகரீதியாக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை7 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வியாபாரம் ஆகியுள்ளது தமிழகம் முழுவதும் வசூல் ரீதியாகவும் ஆதித்ய வர்மா வெற்றி பெற்றதாக அப்படத்தின் 3 ஏரியா உரிமைகளை வாங்கியுள்ள சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் கூறுகிறார்
 
இந்த படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்கள்மத்தியில் பகிர்ந்து  கொண்ட
நடிகர் விக்ரம்
இது
ஒருஅருமையான தருணம். ஒரு இதழில்படம் பற்றி விமர்சனம் எழுதி இருந்தார்கள். த்ருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. த்ருவின் அப்பா சியான் விக்ரம் இன்று சபாஷ்” என்று எழுதி இருந்தார்கள்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது.ஊடகங்கள் மொத்தமும் த்ருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. நான் பேச வேண்டியதை எல்லாம் த்ருவ் பேசிவிட்டார். இந்தப்படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி. த்ருவ்12 வயதில் செய்த டப்ஸ்மாஷ்  பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி.
இந்தப்படத்தை த்ருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரியபலம் கிடைத்தது.  அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம்.
அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். த்ருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது. அவருக்கும் நன்றி.
ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார்,நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள்.
அது ரொம்ப பெரிய விசயம். இந்தப்படம் கிரியாசா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார்.
 இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோடஎல்லா உதவி இயக்குநர்களும். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.