நடிகர் பாலா சிங் காலமானார்

இந்தியன், புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் பாலா சிங் (67), புதன்கிழமை அதிகாலைசென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல்காலமானார்.

மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பாலா சிங், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்தது சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.
மேடை நாடகங்களில் நடித்து வந்த பாலாசிங், நாசர் இயக்கத்தில் அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்தியன், புதுப்பேட்டை, விருமாண்டி உள்ளிட்ட படங்கள் இவரது திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது.

சமீபத்தில் மகாமுனி மற்றும் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த பாலா சிங் மறைவு, திரைத்துறையினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.