பிரகதியை துன்புறுத்திய காமெடி நடிகர் யார்

பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரகதி அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

“மூத்த காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே பழகினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்தன.

பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவை தாங்க முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது.
தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன்.
அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை என்றவர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த காமெெடி நடிகர் யார் என்பதை கூறாமல் தவிர்த்துவிட்டார் இதனால் பிரகதி நடித்த படங்களில் நடித்த காமெடி நடிகர்கள் பட்டியலிடப்பட்டு இதில் எவராக இருக்கும் என்கிற விவாதம் கொரோனா நெருக்கடியிலும்சினிமா வட்டாரத்தில் பரபரப்பான விவாதமாக மாறிவருகிறது.