‘டாக்ஸிக்’ இந்திய சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் முயற்சி- யாஷ்

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘த டாக்​ஸிக்’. இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, தாரா சுதா​ரி​யா, ருக்​மணி வசந்த் என பலர் நடித்​துள்​ளனர்.

கன்​னடம், ஆங்​கில மொழிகளில்

உரு​வாகி​யுள்ள இந்​தப் படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம்
செய்​யப்​பட்டு 2026ஆகஸ்ட்26 ஆம் தேதி வெளி​யாக இருக்​கிறது.

கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் சார்​பில் வெங்​கட் நாராயணா, மான்ஸ்​டர் மைண்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் யஷ் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா பெங்​களூரு​வில் நடை​பெற்​றது. கன்னட நடிகர்சிவராஜ்கு​மார் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு படக்​குழு​வினரை வாழ்த்​தி​னார்.

விழா​வில் நடிகர் யஷ் பேசி​ய​தாவது

 இந்த திரைப்​படத்​தைக் கன்​னடம், தமிழ், தெலுங்கு என்று தனித்​தனி​யாகப் பார்க்க வேண்​டிய தில்​லை. இது ஓர் இந்​திய திரைப்​படம். இதில் அந்​தந்த திரை​யுல​கைச் சேர்ந்த திறமை​யான நடிகர்​கள் ஒன்​றாக இணைந்​துள்​ளனர்.

இத்​தனை சிறந்த நடிகர்​கள் ஒன்​றாகச் சேரும்​போது சில சங்​கடங்​கள் வரலாம். ஆனால் இதில் தங்​கள் ஈகோவை ஒதுக்கி வைத்​து​விட்​டு, இந்​திய சினி​மாவை உலக அரங்​குக்கு கொண்டு செல்ல வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​துக்​காக இணைந்​த​தால் தான் இந்​தப் படம் சாத்​தி​ய​மானது.

இந்​தப் படத்தை உரு​வாக்​கு​வது மிக​வும் கடின​மான ஒன்​று. இது ஒரு வித்​தி​யாச​மான முயற்​சி. மிக​வும் சவாலானது, இது ஒரு வணிக ரீதி​யான படம் அல்ல.

வாழ்க்​கை​யில் ஒன்​றைச் செய்ய விரும்​பும்​போது, எது​வும் உங்​களைத் தடுக்​கக்​கூ​டாது என்று நம்​பு​கிறேன். நம்​மில் பலர், மோச​மாகப் பேசுபவர்​களை​யும், ‘உங்​களால் இதைச் செய்ய முடி​யாது’ என்று சொல்​பவர்​களை​யும் பார்க்​கிறோம். ஆனால், நான் அப்​படி சொல்​வதைக் கேட்​ப​தில்​லை.

யாராவது என்​னிடம் ‘உங்​களால் இதைச் செய்ய முடி​யாது’ என்று சொன்​னால், அதை அவர்​களின் முட்​டாள்​தனம் என்றே கருதுகிறேன். அதற்​கான முயற்​சி​யை​யும் நேரத்​தை​யும் உழைப்​பை​யும் செலுத்​தும்​போது, வாழ்க்​கை​யில் எதை​யும் சாதிக்க முடி​யும்.இப்​படத்​துக்​காக 200 நாட்​கள் உழைத்​திருக்​கிறோம். எங்​கள் உழைப்​பும் செல​வழித்த ஒவ்​வொரு ரூபா​யும் படத்​தில் தெரி​யும்.
Comments (0)
Add Comment