ரஜினிகாந்த் ரசிகராக ஹர்பஜன்சிங் நடித்துள்ள ப்ரண்ட்ஷிப்

சென்னையில் ஒருநாள் 2, அக்னி தேவ் ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து, இயக்கியுள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூனும், படம் முழுக்க வரும் நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடித்துள்ளனர். தியேட்டர்கள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், பிரெண்ட்ஷிப் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது.

படம் பற்றி இயக்குனர்கள் கூறியதாவது, பிரெண்ட்ஷிப் படம் தலைப்புக்கேற்றாற் போல் நட்பை அடிப்படையாக கொண்ட கதை. கல்லூரி நண்பர்கள் 5 பேருக்கு இடையே இருக்கும் நட்பு. இந்த 5 பேரில் லாஸ்லியா மட்டுமே பெண். அர்ஜூன் மிக முக்கியமான சஸ்பென்ஸ் கதாபாத்திரம். படம் முழுக்க கலகலப்பாக நகர்ந்தாலும் இறுதியில் மிக முக்கியமான சமூக கருத்தும் இருக்கிறது.

இந்த படம் வந்தபிறகு ஆண் பெண் நட்புக்கே இன்னொரு முகம் கிடைக்கும். நாயகன் நாயகி என்று சொல்ல முடியாத அளவிற்கு எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய டி.எம்.உதயகுமார் இசையமைக்கிறார். படத்தில் கிரிக்கெட் காட்சியும் இருக்கிறது. ஹர்பஜன் சிங் தீவிர ரஜினி ரசிகராக நடிக்கிறார். படத்தில் சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்று ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், மறைந்த நடிகர் சுபா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

#harbajan
Comments (0)
Add Comment