ஆனந்த கண்ணன் காலமானார்

இன்றைய வானொலி, தொலைக்காட்சிதொகுப்பாளர்களுக்கு 1990களில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்தகண்ணன். சிங்கப்பூர் தமிழரான இவர்சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் ஒரு நிகச்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆனந்த-கண்ணன்

பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்துகொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வைக்கப்பட்ட ஆடிசனில் கலந்து கொண்டு வீ.ஜேவாக தேர்வானார் ஆனந்த கண்ணன்.

இந்த சேனலில் ஜோடிப்பொருத்தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார் கண்ணன். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெண்கள் வட்டாரத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது.

அந்த-கண்ணன்

நங்கூரம் ஆனந்த கண்ணன்

அதன்பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90 களில் பிறந்த குழந்தைகளின் பேவரைட் நாடகம் ஆகும்.

மேலும், 2012 ஒரு பேண்டஸி 3 டி படத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இந்த படத்தின் பெயர் அதிசய உலகம். மேலும், வெங்கட்பிரபுவின் சரோஜா படத்திலும் நடித்தார். அதன்பின்னர் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார் ஆனந்த கண்ணன். தனக்கான வாய்ப்புகள் குறையவே சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் திரும்பி சென்று செட்டிலானர் அங்கு மீண்டும் வசந்தம் தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கினார் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை முறையாக கற்றவர் ஆனந்த கண்ணன் ஆனந்த கூத்து என்ற பயிற்சி அமைப்பின் மூலம் மாணவர்களுக்குதான் கற்ற கலையை கற்பித்து வந்தார்
இந்நிலையில் ஆகஸ்ட் 16 அன்று ஆனந்த கண்ணன் மரணம் அடைந்துள்ளார் அவர் மரணத்திற்கான காரணம் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும் அரிதான புற்றுநோய் காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறதுithanai_naalai_engirunthai_movie