அருண்விஜய் அதிரடி அறிமுக இயக்குனர் குழப்பத்தில்

அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர்.

2019ஆம் வருடம்ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று அருண் விஜய் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பேசிய விதம் தயாரிப்பாளர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்பது போலவே தோன்றியது.

அவர் கூறியிருந்ததாவது..

அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய பாக்ஸர் படம் பற்றித்தான் நிறைய பேர் கேட்கின்றீர்கள். உங்களைப் போலவே நானும் இந்த படத்தில் நடிப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். இதற்காக நான் கடினமாக உழைத்து தயாராகி வருகிறேன். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்காமல் உள்ளது.

இதற்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிக அளவு

உழைப்பு மற்றும் கமிட்மெண்ட் தேவைப்படுகிறது. அதனால் இதை ஒரு டைம் பிரேம் வைத்துத்தான் செய்ய முடியும். அதற்கு தயாரிப்பாளர் தரப்பு தெளிவாக இருக்க வேண்டும். அதனால் இந்த படம் பற்றி என் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருங்கள்” என அருண் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்….
பாக்ஸர் படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தான் அருண் விஜய்க்கு வில்லனாக இந்தப்படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது தோற்றத்தை காட்டும் ஒரு போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

என்ன நடந்தது? என்று விசாரித்தால்,

படம் தொடங்கும்போதே இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பாளர் மதியழகன் முடிவு செய்துவிட்டாராம்.

ஆனால், அதை இரகசியமாக வைத்திருந்தாராம். அதுமட்டுமின்றி இப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ராணா டகுபதி அல்லது அவருக்கு இணையான வேறு நடிகரை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களாம்.
இப்போது மதியழகனே நடிப்பதை வெளிப்படுத்தியதால் கோபமாகிவிட்டராம் அருண்விஜய்.

இதனால் இயக்குநரை அழைத்து, இந்தக் கதையில் வில்லன் வேடம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் ஏதாவதொரு பெரிய நடிகரை நடிக்க வைக்கலாம். படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

இப்போது கதாநாயகன் பேச்சைக் கேட்பதா? தயாரிப்பாளர் பேச்சைக் கேட்பதா? என்றுஇயக்குனர் மதியழகன்என்று தடுமாறுகிறாராம்.