டி.ராஜேந்தரை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கையின் அடையாளம், பன்முக ஆளுமைமிக்க டி.ஆர். எனும் டி.ராஜேந்தர் கடந்த மாதம் வரை அவரது கம்பீரமான குரல் சமூக வலைதளங்களில் கேட்டுக்கொண்டிருந்தது திடீர் என உடல் நல குறைவால் கடந்த வாரம் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்தே செய்தி வெளியானது ஊடகங்களில் டி.ஆர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி வெளியானது அதன் பின்னரே டி.ஆர் உடல் நிலை குறித்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி அவரது மகன் சிலம்பரசன் அறிக்கையொன்றை வெளியிட்டார்பரிசோதனையில் அவரது வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரை வெளிநாடு கூட்டிச் சென்று சிகிச்சை செய்யும் முடிவில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் சிலம்பரசன்

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள டி.ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சையையும் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.