சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக தற்போதுடி.ராஜேந்தர் இருக்கிறார்.
அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி மீரான் சாகிப் தெருவில் உள்ள அந்ததிரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக இருப்பதால் தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு எனும் அமைப்பின் தலைவராகவும் ஆனார்.
ஃபெடரேசன் என்று திரையுலகினரால் சொல்லப்படும் தமிழ் திரைப்பட கூட்டமைப்பு என்பது, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு.
தமிழ்த்திரையுலகின் உச்சநீதிமன்றம் என்று சொல்லுமளவுக்கு திரைப்பட தயாரிப்பு, விநியோகம், திரையிடல் எனஅனைத்து துறைகளிலும் ஏற்படுகிற சிக்கல்களுக்கும் தீர்வுகாணக்கூடியஅமைப்பு.
2019 டிசம்பரில் டி.ராஜேந்தர் சென்னை,திருவள்ளூர் காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரானதால் கூட்டமைப்புக்கும் தலைவரானார்.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போன்ற அதிகாரமிக்க தலைமை பதவி டிராஜேந்தரின் கையை விட்டுப் போகவிருக்கிறது.எப்படி?
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழகமெங்கும் இருக்கும் முக்கிய விநியோகஸ்தர்களான அருள்பதி, மதுரை அன்புசெழியன், அழகர்சாமி, தேனாண்டாள் சாகுல், வேலூர் சீனிவாசன், கோவைஇராஜமன்னார், திருப்பூர் சுப்பிரமணியம் திருச்சி பிரான்சிஸ்உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து ஒரு புதிய சங்கத்தை உருவாக்குகின்றனர்.
தமிழ்நாடு நடப்பு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் என்கிற பெயருடன் அந்தச் சங்கம் தொடங்கப்படவிருக்கிறது.இந்தச் சங்கத்தில் இப்போது படங்கள் வியாபாரம் செய்யும் விநியோகஸ்தர்களை மட்டும் உறுப்பினர்களாக கொண்டதாக அமையவிருக்கிறது. இச்சங்கத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமின்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்புக்கு கடன் கொடுக்கும்பைனான்சியர்கள்
ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இந்தச்சங்கம் உருவானால்,இப்போது தமிழகமெங்கும் இருக்கிற விநியோகஸ்தர்கள் சங்கங்கள் செயல் இழக்கும் திரைப்படம் சம்பந்தபட்ட அனைத்து பஞ்சாயத்துகளும் புதிய அமைப்பில் பேசி தீர்க்கப்படும் என கூறப்படுகிறது இதன் காரணமாகதிரைப்பட கூட்டமைப்பு எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாகிற போது அதன் தலைவராக தற்போது இருக்கும் T.ராஜேந்தர் அதிகாரத்தை செயல்பட இயலாது.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின் தனியாகத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற சங்கம் தொடங்கினார் டி.ராஜேந்தர்.
இப்போது அதேபோல் தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் என்கிற சங்கத்தை உருவாக்கி அவரை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் என்று திரையுலகில் பேச்சாக இருக்கிறது.
தமிழ்நாடுநடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தொடக்க நிகழ்வு 9.12.2030 அன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது.