சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்பிடிப்பு தொடங்கியது

0
44

டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி,முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய் மற்றும் குக்வித்கோமாளி புகழ் சிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.கோவையில் உள்ள கேபிஆர் கல்லூரியில் படப்பிடிப்பு நடக்கிறது. அந்தக் கல்லூரியிலேயே பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

தொடக்கநாளில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், காளி வெங்கட், பால சரவணன், முனீஸ்காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here