பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகள் அல்லது பெரும் பணக்காரர்கள் மட்டுமே நடிகராக வரமுடியம் என்கிற நிலைக்கு மாறாக அவ்வப்போது சில சாமானிய மனிதர்கள் தமிழ் சினிமாவில் வெற்றிபெறுவது உண்டுஇந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் நடிகர் நிமல்.
விரைவில் வெளியாகவிருக்கும் கால் டாக்ஸி, அட்லி ஆகிய படங்களில் எதிர்மறை நாயகன் வேடமேற்றிருக்கிறார் நடிகர் நிமல். அப்படங்கள் வெளியாகும்முன்பே மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.இது எப்படி சாத்தியம்? என்று விசாரித்தால் சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது.அம்பாசமுத்திரம் அருகில் அகஸ்தியர்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்ட நிமலுக்கு நடிகராக வேண்டும் என்பது ஆசை. அதற்காகச் சென்னை வந்து இயக்குநர் டி.பி.கஜேந்திரனைச் சந்தித்திருக்கிறார்.
அதன்பிறகு நடந்தவை பற்றி நிமலே கூறுகிறார்…
டி.பி.கஜேந்திரன் சாரைப் பார்த்து என்நிலைமையைச்சொன்னேன்.
அதனால், திரைத் துறையில் எனக்குப் புதுவாழ்க்கை கிடைத்தது.அதன் பிறகு சில திரைப்படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆக வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோதுதான்,
அடுத்து அருணை பாலா இயக்கத்தில் அட்லீ எனும் திரைப்படத்திலும் மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் சார் உதவியாளர் வி.எஸ்.செல்வதுரை இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திரைப்பிரபலங்கள் வீட்டு வாயிலில் தவமே இருந்தாலும் அந்தக் கதவுகள் சாமானியர்களுக்காக ஒருபோதும் திறக்காது. அதே திரையுலகில் இருக்கும் டி.பி.கஜேந்திரன், நான் கூப்பிடுகிறேன் என்று சொல்லியதோடு நிற்காமல் சொன்ன சொல்லை மறக்காமல் கூப்பிட்டு வேலை கொடுத்தது வியப்புக்குரிய செய்தி.அதேபோல் திரைத்துறையில் நன்றி என்ற சொல்லுக்கு இடமேயில்லை என்பார்கள், ஆனால், வார்த்தைக்கு வார்த்தை டி.பி.ஜி சார் என்று உச்சரித்து தன் நன்றியைக் காட்டி வரும் நிமலுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்பதில் மாற்றமில்லை.