நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 3,2021 அன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடக்கவிருக்கிறது. இத்னால் மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் பரப்புரைகள் உச்சகட்டத்தில் இருக்கும் என்பதால் திரையரங்குகளுக்குக் கூட்டம் வராது என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி டாக்டர் வெளியான அடுத்த வாரமே கார்த்தி நடித்துள்ள சுல்தான் படமும், அதற்கடுத்த வாரம் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படமும் வெளியாகவுள்ளன.மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட்டால் தேர்தல் பரபரப்பையும் மீறி படம் நல்லா இருக்கு என்கிற பெயரைப் பெற்று மக்கள் திரையரங்குகளுக்கு வரலாம்.அதற்குள் சுல்தான், கர்ணன் ஆகிய படங்கள் வருவதால், அடுத்தடுத்த வாரங்களில் முதன்மைத் திரையரங்குகள் கைவிட்டுப் போககக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.இவையெல்லாம் டாகடர் வசூலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கிற அனுபவஸ்தர்களின் அரிவுரையை ஏற்று டாகடர் பட வெளியீட்டைத் தள்ளி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது