கபடதாரி இறுதிகட்ட பணிகளை தொடங்கியது

கொரோனாவைரஸ் பிரச்சினை காரணமாக திரைப்படதுைறை கடந்த 40 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது

மே 19 வரை தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தபோதிலும் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்க சில தளர்வுகளை அறிவித்தது இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை என்றாலும்
ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்த திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கினால் சினிமா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச
வேலைவாய்ப்பு கிடைக்கும் என பெப்சி அமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்தனர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தற்போது இல்லை தயாரிப்பாளர்கள் தரப்பில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க அனுமதி கிடைக்கும் என்ற சூழ்நிலையில் தயாரிப்பாளர்தனஞ்செயன் தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜீவிடம் மனு கொடுத்தார் அதன் அடிப்படையில் அரசு அனுமதி வழங்கியது
நேற்று(11.05.20) முதல் பத்துக்கும் மேற்பட்ட படங்களின் இறுதிகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது
கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து கிரியேட்டிவ் எண்டர்டெயினர் நிறுவனம் ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெய பிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப் படாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று (மே 11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது.

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றி யிருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார்.வணிகத் தலைமையை எஸ்.சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ர மணியன் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை ஜி.தனஞ்செயன் கவனிக்கிறார்.