கேளம்பாக்கத்திற்கு செல்ல நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.
தனது இளைய மக்கள் சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைத்திருக்கும் பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க செல்லும்போது எடுத்த புகைப்படம்தான் அது என்ற தகவலும் வெளியானது, பண்ணை வீட்டுப் பகுதியில் ரஜினிகாந்த் நடைபயிற்சி செல்லும் வீடியோவும், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்ற கேள்வி எழுந்தது.
சென்னையில் இன்று (ஜூலை 22) செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் இதுபற்றி கேட்டபோது, “ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பது குறித்து ஆய்வு செய்தே கூற முடியும். மீண்டும் கேளம்பாக்கத்திலிருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் வாங்கினாரா என்பதும் ஆய்வு செய்யப்படும்” என்று பதிலளித்தார்.
சென்னை வர வேண்டும் என்று விரும்புபவர்கள் முறையான இ-பாஸ் ஆவணங்களோடு உடனே பதிவு செய்யலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
எழில்