ரஜினியை முந்தும் கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கி
அகில இந்திய அரசியலில் கவனம் பெற்றார்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொன்னாரே தவிர அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைக் கூட தொடங்கவில்லை முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார் என்கிற விமர்சனங்கள் அரசியல் தளத்தில் விவாதமாகி வருகிறது

கொரோனா ஊரடங்கு, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு பற்றி அரசியல் கட்சிகளை போன்று, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கமல் கூறும் கருத்துகள், விமர்சனங்கள் மக்கள் கவனம் பெற்று வருகின்றன. சாதாரண விஷயங்களுக்கு கருத்து சொல்லவும், மோடி வேண்டுகோள்படி விளக்கு பிடிக்க மட்டும் வீதிக்கு வந்த ரஜினி இன்றுவரை மௌன சாமியாராக இருந்து வருகிறார்

சினிமாவில் ரஜினிகாந்த்திற்கு இருக்கும் மக்கள்வரவேற்பும், வசூலும் கமல்ஹாசனுக்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதே சமயம் அரசியல் என்று வரும் போது ரஜினிகாந்தை விட கமல்ஹாசன் வெகுஜன மக்களிடம் வரவேற்பு, ஆதரவு அதிகரித்து வருகிறது

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் நுழைந்த அன்றே அவரை  பின்தொடர்பவர்கள்எண்ணிக்கை அதிகரித்துசாதனை புரிந்தார்.
அரசியல் சமூகம் சார்ந்த விஷயங்களில் தனக்கு வசதிப்பட்ட நேரத்தில் தனக்கு உடன்பாடானவிஷயத்தில் கருத்துத் தெரிவிக்க டிவிட்டர் தளத்தை ரஜினிகாந்த்பயன்படுத்திக் கொள்வார்

கமல்ஹாசன்நடிகராக இருந்தபோதும் அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும்அரசியல் சமூகம் சினிமா என எந்த துறைசார்ந்த பிரச்சனைகளுக்கு தனது கருத்தை பதிவு செய்வதற்கு தயங்கியதில்லை

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கமலஹாசன் டுவிட்டர் பக்கத்தில் தீவிரமாக கருத்து சொல்ல தொடங்கிய பின்னர் சர்வதேச அளவில் அந்த போராட்டம் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியபின்னர் கமல்ஹாசன் முழுமையாக அரசியல் செய்வதுடிவிட்டர் தளத்தில் தான் என்று விமர்சிக்கப்படும் அளவிற்கு டிவிட்டரைப் பயன்படுத்திவருகிறார்

கொரானோ ஊரடங்கு இருக்கும் சமயத்தில், தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்கவில்லை என நீதிமன்றமும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்து, ஆன்லைனில் மட்டும்விற்பனை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் டிவிட்டர்பக்கத்தைபின்
தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதுரஜினியைபின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் முந்தைய நிலையிலேயே இருக்கிறார்

ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது உள்ளனர்.

மதுக்கடை திறப்புக்கு எதிராகசென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிராகஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தடையை நீக்க முறையீடு செய்வதற்கு முடிவெடுத்துள்ள சூழ்நிலையில் அதற்கெதிராக கமலஹாசன் வெளியிட்டுள்ள கருத்து தமிழக பெண்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்று உள்ளதால் அடுத்து வரும் நாட்களில் கமலஹாசனின் சமூக வலைத்தளம் தமிழக மக்களின்கவனத்தை பெருமளவிற்குதன் பக்கம் திருப்பகூடிய வாய்ப்பு இருக்கிறது