ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தின் 60 சதவிகிதம் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், பல்வேறு பிரச்சினைகளால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. இந்நிலையில், லைகா நிறுவனத்திற்கும், கமல், ஷங்கருக்குமிடையே சில மனக்கசப்புகள் உருவானது.
நாளடைவில் அது பெரிய அளவில் விரிசலாகத் தொடங்கியது. இதனால் இந்தியன்-2வில் இருந்து கமலும், ஷங்கரும் வெளியேறி வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இதனால் விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது லைகா நிறுவனம். தற்போது இதன் வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. அதேசமயம் ஷங்கர் வேறு படங்களை இயக்க கோர்ட் தடை விதிக்கவில்லை.
இந்தநிலையில், கமல் விக்ரம் படத்திலும், ஷங்கர் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்தியன்-2 மீண்டும் தொடர வாய்ப்பில்லாத நிலை உருவாகியிருப்பதாக லைகா நிறுவன வட்டாரங்களில்பேசிக்கொள்கிறார்
இந்தநிலையில், தற்போது சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கத் தொடங்கியுள்ள லைகா நிறுவனம், இனிமேல் கமல், ஷங்கரைப் போன்ற மெகா நடிகர், டைரக்டர்களை நம்பி களமிறங்கப் போவதில்லையாம். தங்களின் கட்டுப்பாட்டுக்குள் பணியாற்றக்கூடிய ஹீரோ, டைரக்டர்களின் படங்களாக தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். அதனால் சற்குணத்தைத் தொடர்ந்து மேலும் சில வளர்ந்து வரும் டைரக்டர்களிடமும் தீவிரமாக கதை கேட்டு வருகிறது லைகா நிறுவனம்.