அரசியல் பேசும் மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டிரைலரில் யார் மிரட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால், எதிர்பாராத விதத்தில் அந்தப் பெயரைத் தட்டிச் செல்வது இயக்குநர் எஸ்ஜே சூர்யா தான்.

சிம்பு வெறும் அதிரடி ஆக்க்ஷனில் கலக்க, எஸ்.ஜே.சூர்யாவோ டயலாக் டெலிவரி, எமோஷன் என அசத்துகிறார். “வந்தான், சுட்டா போனான், ரிபீட்டு,” என ரிபீட்டாகச் சொல்லும் அந்த வசனம் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிடும்.

‘டைம் லூப்’ அடிப்படையிலான திரைக்கதை என்பதால் டிரைலரைப் பார்த்து என்ன நடக்கிறது என்பதை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. சிஎம் கலந்து கொள்ளும் ‘மாநாடு’ ஒன்றில் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது என்பது தான் படத்தின் கதை. அவரைக் கொல்லப் போவது சிம்பு, காப்பாற்றப் போவது எஸ்.ஜே.சூர்யா என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

யுவனின் இசை, ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு, பிரவீன் படத்தொகுப்பு மூன்றுமே டிரைலரில் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது. தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ள மாநாடு

பேசப்போகும் அரசியல் என்ன என்பதுதான் விவாத பொருளாக மாற்றம் கண்டுள்ளது.