விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின்வேலைகள்தொடங்கிவிட்டதா கவும் கூறப்பட்டது.
இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
Related Posts
இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும்சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுவரை வெளியிடப்படவில்லை
அதற்குக் காரணம், படத்தின் திரைக்கதை முழுமையாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் விஜய்க்கு திருப்தியில்லையாம்.
சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதையும் செய்து விஜய்யிடம் சொன்னாராம் முருகதாஸ்.
அதிலும் விஜய் நிறைவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் அதைத் திருத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம் முருகதாஸ்.
ஒருபக்கம் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம், ஒரு புது இயக்குநரைப் போல நம்மை நடத்துகிறார் என்று விஜய் மீது கோபமாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.