நடிகர் விக்ரம் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவற்றில் மகான் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது.
கோப்ரா படப்பிடிப்புபாக்கி இருக்கிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிற நிலையில் அவர் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கிறது பா.இரஞ்சித் இயக்கும் புதியபடத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.
பா.இரஞ்சித் இப்போது நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு விக்ரம் நடிக்கும் படத்தைத் தொடங்குவாராம்.
இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் தயாரிக்க உள்ளார்மிக விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.