திரைப்படவிநியோக நிறுவனமான SKLS கேலக்சி மால் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் இணைந்து பெயரிடப்படாதபுதிய படம் ஒன்றை தயாரிக்கிறது இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் இன்று காலை நடைபெற்றது
மா, லட்சுமி உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய குறும்படங்களையும், நயன்தாரா நடித்த ஐரா படத்தையும் இயக்கிய சர்ஜுன் இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
கலையரசன் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக மிர்னா நடிக்கிறார். ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதை தமிழ் சினிமாவில்இதுவரை சொல்லப்படாத பின்னணியில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர்
திரைக்கதை: அனுசுயா வாசுதேவன்
ஒளிப்பதிவு: பாலமுருகன்
Related Posts
இசை : R. சிவாத்மிகா
பாடல்கள்: யுகபாரதி
இணை தயாரிப்பு: சாரா மோகன்,
தினகர் பாபு தயாரிப்பு: E மோகன்
கதை, இயக்கம்: சர்ஜுன்