மொத ராத்திரி படமெடுக்க ஆறு ஆண்டுகள் அலைந்த இயக்குநர்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான மொதராத்திரிபடத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதனை செய்தியாளர்களிடம் பகிரும் வகையில் சென்னையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் நிகழ்வில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில்தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசியபோது
“இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி,
“என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்”.