கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் நாளை (ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் கமல்ஹாசன், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தாக தகவல் வெளியானதுஇந்த சந்திப்பு குறித்து படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் கமல் ரஜினியின் நட்புறவு குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சி ததும்பு பதிவிட்டு அவர் ரஜினியை சந்தித்தது மற்றும் ரஜினி, கமல் சந்திப்பு போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து லோகேஷின் பதிவும், ரஜினி கமல் சந்தித்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகின. அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியை சந்தித்து 60 நிமிடங்கள் உரையாடிய அனுபவத்தை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்
இந்த நிலையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில்அஜித் குமார் சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்பட எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாக பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் வழக்கமான எளிமையான தோற்றத்தில் ரஜினியும், தனது 61வது படத்துக்கான கெட்டப்பில் அஜித்குமார் இருவரும் இருக்கின்றனர். ஆனால் அந்த புகைப்படம் முற்றிலும் போலியானது எனவும், ரஜினிகாந்தும்அஜித்குமாரும் சந்திக்கவில்லை, அஜித்குமாருடன் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரஜினிகாந்த்தும் அஜித்குமாரும் இணைந்து இருப்பது போன்று எடிட்டிங் செய்து பரப்பியிருப்பது தெரிய வந்திருக்கிறது.இருப்பினும் இந்த போலி புகைப்படத்தில் இருப்பது நிஜமாகி
விடக் கூடாதா என்று ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், தரமான Fan Made என்றும் சமூக வலைத்தளங்களில்கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அஜித்குமாரின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளத்தில் பரவி வரும் புகைப்படம் போலி எனக் கூறியுள்ளார்.