கூகுள் குட்டப்பன் விழாவில் எதிரொலித்த ரஜினியின் ராணா

2000 ஆம் ஆண்டு வெளியான தெனாலி படத்துக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படம் கூகுள் குட்டப்பன்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழாக்கம் இது.சபரி , சரவணன் ஆகிய இருவர் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். படத்தில் நாயகனாக பிக்பாஸ் தர்ஷனும் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியாவும் நடிக்கிறார்கள்.பிராங்க் ராகுல் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் தொடக்கவிழா

28.01.2021 அன்று சென்னையில் நடைபெற்றது.அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு, ரஜினி சார் ஆறு மாதங்களுக்கு முன் என்னை அழைத்தார். அப்போது ராணா படத்தின் கதையை மறுபடி சொல்லுங்கள் என்று கேட்டார். நான் முழுக்கதையையும் சொன்னேன். கேட்டுவிட்டு, பிரமாதமா இருக்கு, இதைச் செய்ய உடல் வலு இன்னும் வேண்டும். விரைவில் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார் என்றார்.

தெனாலி -2 படம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, இதுபோல் பல படங்களுக்குக் கேட்கிறார்கள். கமல் சாரிடமும் பேசியிருக்கிறோம். பஞ்சதந்திரம் -2 படமும் செய்யும் திட்டம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.