சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடக்கின்றன.
இவற்றிற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.சனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளியானது.
அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் இந்தப்படத்துக்கு டான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டான் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை அணுகினார்களாம். சிபிச்சக்ரவர்த்தி அட்லியிடம் பணியாற்றும்போதே எஸ்.ஜே.சூர்யாவிடம் நல்ல அறிமுகம் என்பதால் அவரை நடிக்க வைக்க முயன்றாராம்.அவரும் சிபிச்சக்ரவர்த்தியை அழைத்து கதை கேட்டிருக்கிறார். அதன்பின் படத்தில் தன்க்கு முக்கியத்துவம் இருக்காது என்பதால் மறுத்துவிட்டாராம். கதையாக நன்றாக இருக்கிறது ஆனால் எனக்குச் சொல்லப்பட்ட வேடத்தின் அளவு எனக்கேற்ற மாதிரி இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டதாகத் தகவல்.