எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை

0
216
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் சட்டத்தின் இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் 70 வயதை கடந்து இளமை துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பொருந்தும் மகன் விஜய்தமிழ் சினிமாவின் முதன்மை நட்சத்திரம் இருந்தபோதிலும் புதுமுகங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து இயக்குவதுதானே கதை நாயகனாக நடிப்பது என்பதில் தீவிரமாக செயல்பட்டுவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்
அவரது இயக்கத்தில் 71வது  படமாக ‘நான் கடவுள் இல்லை’ படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்க்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி,ரோகினி,இமான்,மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மகேஷ் K தேவ்,
இசை    சித்தார்த் விபின்,
எடிட்டிங் பிரபாகர். கலை வனராஜ்.
இப்படத்தில் நேர்மையும், தைரியமும் கொண்ட போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். அவரது பாத்திரம் வழக்கமானதாக இல்லாமல்  புதுமையாக அதிரடியாக  இருக்கும் என்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
 வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார்.ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை  கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் .அந்தக் காலத்தில் ‘நான் சிவப்பு மனிதன்’ என்ற பரபரப்பான படம் இயக்கி பெயர் பெற்றார். அதே பாணியில் இந்த ‘நான் கடவுள் இல்லை’ படத்தையும் இயக்கியிருப்பதாக கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here