தெலுங்கு படத்தில் நடிக்க தனுஷ்சை சிபாரிசு செய்த சாய்பல்லவி

சினிமாவில் புதிய வாய்ப்புக்களை கைப்பற்ற நடிகைகளுக்கு கதாநாயக நடிகர்கள் அல்லது சக்திமிக்க தயாரிப்பாளர்கள் உதவி செய்வார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வியாபாரம் உள்ள நாயகனாக வளர்ந்துவரும் நடிகர் தனுஷ் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை சாய்பல்லவி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்

தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், சூர்யா, கார்த்தி, அர்ச்சுன், விஜய்ஆண்டனி தனுஷ் போன்றவர்கள் தங்களது படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு, அங்கேயும் குறிப்பிட்ட ஆதரவு தளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் இதனால் தமிழ் நடிகர்கள் நடிக்கும் தமிழ் படங்களை நேரடியாக தெலுங்கு டப் செய்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியிடும் வியாபார நடைமுறை அதிகரித்து வருகிறது

தமிழ் கதாநாயகர்களுக்கு தெலுங்கில் வியாபாரம் குறிப்பிடத்தக்கவசூல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டதெலுங்கு தயாரிப்பாளர்கள் தற்போதுதெலுங்கு படங்களில் தமிழ் நடிகர்களைநடிக்க ஒப்பந்தம் செய்ய தொடங்கியுள்ளனர்

இதில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். சேகர் கம்முலா டைரக்சனில் தனுஷ் நடிக்கிறார்.இதில் சேகர் கம்முலா தற்போது நாகசைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில் சேகர் கம்முலா மற்றும் தனுஷ் என்கிற யூகிக்க முடியாத கூட்டணி அமைவதற்கு பின்னணியில் காரணமாக இருந்தவர் சாய்பல்லவி தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி படத்தில் நடித்து வந்தபோது அவரது திறமையை பார்த்து வியந்த சாய் பல்லவி, தனுஷுடன் தனக்கு உள்ள நெருங்கிய நட்பின் அடிப்படையில் சேகர் கம்முலா பற்றி கூறி சிபாரிசு செய்தாராம். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலாவுடன் சந்திப்பு நிகழ்த்திய தனுஷ், அவர் சொன்ன கதையிலும் இம்ப்ரஸ் ஆகி உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.