மகேஷ்பாபுவுக்குதெலுங்கு படத்தில் வில்லனாகும் சஞ்சய்தத்

இந்தி திரையுலகில் கதாநாயகனாக கொடிகட்டிப் பறந்தவர்கள் எல்லாம் வயது காரணமாக தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டனர் 70 வயது ஆனாலும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று தமிழ் சினிமா கதாநாயகர்கள் போன்று அடம்பிடிப்பதில்லை

இந்தியில் முன்னணி நாயகர்களா இருந்தவர்களை தென்னிந்திய சினிமாவிற்கு அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைப்பது இப்போது புது டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. இந்தியில்  அந்த படத்தை வெளியிடவும், வியாபாரம் செய்யவும் எளிதாக இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் தற்போது கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து  தெலுங்கில்

சஞ்சய் தத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, கதாநாயகிகளாக பூஜா மற்றும் நபா நடேஷ் இருவரும் நடிக்க உள்ளார்களாம்.