பிசாசு – 2 படத்திற்காக பாடல் பதிவு

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர்
சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.
பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ள பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலைப் பாட அமேரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடிக் கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம்.ஏற்கனவே ‘பிசாசு 2’ படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 இல் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் இடம்பெற்ற உன்ன நெனச்சு நெனச்சு என்கிற பாடல் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது.அந்தப்பாடலையும் கபிலன் தான் எழுதியிருந்தார். சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.இப்போது 2021 தொடக்கத்திலும் மிஷ்கின் கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணி இணைந்திருப்பதால் 2021 ஆம் ஆண்டிலும் ஒரு பெரிய வெற்றிப்பாடல் உருவாகிவிட்டதென நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.