விஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்

0
361

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி13அன்றுவெளியாகவிருக்கிறது. இதையொட்டி காலை 4 மணி மற்றும்ஏழுமணிக்குசிறப்புக்

காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன.
சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றனவாம்.
நூறு  விழுக்காடு இருக்கைகள்  நிரப்ப தடை ஏற்பட்டுள்ளதால் வசூல் பாதிப்பு ஏற்படும் என்கிற சூழலால் இப்படி அதிக விலைக்கு நுழைவுச்சீட்டுகளை விற்பதாகச் சொல்லப்படுகிறது.விஜய் படங்கள் வெளியாகும்போது இப்படி அதிக விலைக்கு நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுவது வழக்கம்.
இம்முறை கொரானா சிக்கலால் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதிக விலைக்கு நுழைவுச் சீட்டுகள் விற்க வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.ஆனால் அவருடைய வேண்டுககோளையும் மீறி ஆயிரத்து ஐநூறு இரண்டாயிரம் என்று விலை வைத்து விற்பனை செய்து வருவது விஜய்ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதைய காலகட்டத்தில் இந்தப்படத்தைத் திரையிட திரையுலகிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை இப்படி அளவுக்கதிகமாக உயர்த்தி விற்பதால் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.திரையுலகம் மீண்டுவர இப்படம் உதவி புரியும் என்று திரையுலகம் மொத்தமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நேரத்தில் இப்படியான தவறான விசயங்களைச் செய்து எதிர்ப்பாளர்களின் வாய்க்கு அவல் கொடுக்கிறது மாஸ்டர் படக்குழு என்று பலர் வருத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here