விஜய் சிபாரிசை நிராகரித்த சன் பிக்சர்ஸ்

நடிகர் விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக எதிர்பாராமல் கடந்த 45 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறையும், திரையரங்குகளும் முடக்கப்பட்டுள்ளன.நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் இருவாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது இதுபோன்ற காரணங்களால்

மாஸ்டர் எப்போது என உறுதியாக கூறமுடியவில்லை என சில தினங்களுக்கு முன் அப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் செவன் ஸ்கீரீன் ஸ்டுடியோ தலைவருமான லலித்குமார் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது

அப்படம் துப்பாக்கி படத்தின் 2ம் பாகமாக இருக்கலாம்என்று சொல்லப்பட்டது.ஆனால் அப்படி இல்லைஇது புதுக்கதை என்கிறர்கள். அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது முடிவாவதற்கு முன்பாக தன்னுடைய 65 ஆவது படத்தை

இயக்க அட்லியை விஜய் பரிந்துரைத்தார் என்று கூறப்பட்டு வந்தது

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லி வேண்டாம் என்று கறாராக மறுத்துவிட்டதாம். தங்களது நம்பிக்கைக்குரியதேனாண்டாள் பிலிம்ஸ் இன்றைக்கு

பெரும் கடனில் இருப்பதற்கு காரணம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்ததே
அந்த படத்தின் தேவையற்ற காலதாமதம் தேவையற்ற செலவுகளை குறைக்க அட்லிஇணக்கமாக நடந்துகொள்ளவில்லை
அப்படிப்பட்ட அட்லி இயக்கும் படத்தை தாங்கள் தயாரிக்க மாட்டோம் என்று கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை நிராகரித்ததாகச் சொல்லப்படுகிறது.