தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முறைகேடு விளக்கம் கேட்கும் T.R.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 – 2021ஆம் காலத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் கடந்த 22.11.2020 அன்று சென்னையில் நடைபெற்றது 1303 வாக்காளர்களில் 1050 பேர் வாக்களித்திருந்தனர்
ராமசாமி@முரளி தலைமையில் ஒரு அணியும், T.ராஜேந்தர் தலைமையில் ஒர் அணியும் போட்டியிட்டனர்இவர்களை தவிர தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு JSK சதீஷ், துணை தலைவர் பதவிக்கு R.சிங்காரவடிவேலன், கதிரேசன் ஆகியோர் போட்டியிட்டனர்

தலைவராக ராமசாமி@முரளி, செயலாளர்களாக R.ராதாகிருஷ்ணன், .T .மன்னன், துணை தலைவர்களாக கதிரேசன், R.K.சுரேஷ், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் வெற்றிபெற்றனர் மொத்தமுள்ள 27 பதவிகளில் 16 இடங்களுக்கு ராமசாமி@முரளி அணியினரும், சுயேச்சைகள் 3 பேரும் எட்டு இடங்களில் T.ராஜேந்தர் அணியினரும் வெற்றிபெற்றுள்ளனர்

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் துணை தலைவருக்கு போட்டியிட்ட சிங்காரவடிவேலன், அவரை தொடர்ந்து பொருளாளருக்கு போட்டியிட்ட JSK சதீஷ் இருவரும் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றசாட்டை கிளப்பினார்கள்

இதற்கு பதில்கூறும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.வி.சேகர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நீண்ட போராட்டத்துக்கு பின் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது வழக்கம்போல வெற்றிபெற முடியாதவர்கள் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூற தொடங்கியுள்ளனர் வாக்காளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பது காலங்காலமாக நடந்துவருகிறது இப்போது புகார் கூறுபவர்களும் அது போன்ற வழிமுறைகளை கையாண்டார்கள் ஆனால் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானித்து வாக்களித்திருக்கிறார்கள் அந்த முடிவை ஏற்றுக்கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்

தங்களிடம் ஆதாரம் இருப்பவர்கள் நீதிமன்றம் செல்லவேண்டும் அதைவிட்டு வாட்ஸ் அப் குரூப்புகளில் பரபரப்பை கிளப்புவதால் எந்த பயனும் இல்லை என கூறியுள்ளார் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது வெற்றிபெற முடியாதவர்கள் விரக்தி மனநிலையில் பேசுகின்றனர் முறைகேடு நடந்திருந்தால்T.ராஜேந்தர் அணியிலும், சுயேச்சைகளுமாக 11 பேர் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்றார்

இதற்கிடையில் இன்று காலை T.ராஜேந்தர் சங்கங்களின் பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார் அதில் வாக்களிக்காத தவறான முகவரியில் இருப்பவர்களின் தகவல்களை கேட்டுள்ளார் அதேபோன்று வாக்களிக்க வந்தவர்களின் கையப்பம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவாள வாக்கு விபரங்களை கேட்டுள்ளார்.