விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று தங்களது பதவிக்காலத்தை முடித்து ஜனவரி 24ஆம் தேதி அடுத்த தேர்தலும் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பல நடிகர் சங்க உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், தேர்தல் முறையின்றி நடைபெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி கல்யாண சுந்தரம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவில், பல லட்சங்கள் செலவு செய்து நடத்தப்பட்ட தேர்தலை செல்லாது என அறிவிப்பது முறையாகாது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அதேசமயம் தனி அதிகாரி தொடர்ந்து சங்க நிர்வாகத்தை கவனிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாதத்துக்கு ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.