மிஷ்கினை பரவசப்படுத்திய கவிஞர்கபிலன்

இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ.மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜாஇசையமைத்திருந்தார்.அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு தூங்குமா? ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன.அவ்வெற்றிப் பாடல்களைக் கொடுத்த மிஷ்கின் கபிலன் கூட்டணி மிஷ்கினின் தற்போதைய படத்திலும் இணைந்திருக்கிறது.
மிஷ்கின் இப்போது ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் பிசாசு 2 படத்தை இயக்கவுள்ளார்.அந்தப்படத்துக்கு கார்த்திக்ராஜா இசையமைக்கிறார்.
பிசாசு 2 படத்தின் வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன.
முதல்கட்டமாக இரண்டு பாடல்களுக்கான மெட்டுகளை உருவாக்கியிருக்கிறார் கார்த்திக்ராஜா.அம்மெட்டுகள் இரண்டிற்குமான பாடல்வரிகளை ஒரே நாளில் எழுதிமுடித்திருக்கிறார் பாடலாசிரியர் கபிலன்.இயக்குநர் மிஷ்கினின் அலுவலகத்தில் அமர்ந்து பாடல்களை எழுதி முடித்துவிட்டாராம் கபிலன்.
பாடல்வரிகளைக் கேட்ட மிஷ்கின் மிகவும்மகிழ்ந்துபாராட்டியிருக்கிறார்.இவ்வாண்டு சைக்கோ பாடல்கள் மூலம் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட மிஷ்கின் கபிலன் கூட்டணி, அடுத்த ஆண்டையும் இந்தப்பாடல்கள் மூலம் ஆளவிருக்கிறது என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.