பொன்னியின் செல்வன் படத்தை ஒத்திவைத்த விக்ரம்

தீபாவளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.ஆனால், இதுவரை அவர் ஒருநாள் கூட இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லையாம்.

அதனால் தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கலாம் என நினைத்து அவரிடம் தேதிகள் கேட்டார்களாம்.
அவரோ, நவம்பர் இறுதியில் கோப்ரா படப்பிடிப்புக்காக ரஷ்யா போகவிருக்கிறாராம்.அங்கே சுமார் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு அதன்பின் சென்னையில் சில நாட்கள் அதே படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது.

அவற்றை முடித்துவிட்டு 2021 சனவரியில் பொங்கலுக்குப் பிறகு உங்களுக்குத் தேதிகள் தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் ஜெயம்ரவி கார்த்தி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் மணிரத்னம்.