படத்தயாரிப்பாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான். ஆனால் 32 கோடி ரூபாய் என்று பொய் சொன்னதாக அப்படத்தின் இயக்குநர் 11 வருடங்கள் கழித்து செல்வராகவன் அறிவித்துள்ளார். இதன்மூலம் வரவு-செலவு தகவல்களில் கோடம்பாக்க சினிமாவில் நாணயமும் நேர்மையும் இல்லை என்பதை பகிரப்படுத்தியிருக்கிறார் அந்த குற்றத்தை செய்தவர்களில் தானும் ஒருவன் என்பதை தயக்கம் இன்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்

செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா, அழகம்பெருமாள் உள்ளிட்டபலர் இதில் நடித்து இருந்தனர் மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் ஏமாற்றம் தந்தது ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கும் என்பதை போன்று ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு என்று ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகிவிட்டது அவர்களால் ” கல்ட்” திரைப்படமாக தற்போது பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது பதினோரு வருடங்கள் கழித்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளதாக இந்த வருட தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சொன்ன பட்ஜெட் ஒன்று தயாரிக்கப்பட்ட பட்ஜெட் வேறு என்று தயாரிப்பாளர், இயக்குநருக்கும் இடையில் அன்றைய காலகட்டத்தில் நடந்த பஞ்சாயத்துகள் பிரபலமானது அதன் பின் படத்தயாரிப்பு தொழில் இருந்து தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கியது இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தனது ட்விட்டர் பதிவில் செல்வராகவன் கூறியிருப்பதாவது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ 18 கோடி ஆனால் அதை ஒரு மெகா பட்ஜெட்படமாக உருவகப்படுத்த 32 கோடி ரூபாய் பட்ஜெட் என்று அறிவிக்க முடிவு செய்தோம் என்னவொரு முட்டாள் தனம்
உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூல் செய்தபோதிலும், அது சராசரியாக கருதப்பட்டது. என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்…” என்று குறிப்பிட்டுருக்கிறார்
செல்வராகவனின் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்தவர்கள் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே சினிமாக்காரர்கள் பில்டப்பில்தான் வாழ்க்கையை ஓட்டி வருவதாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலைமையில் 11 வருடங்கள் கடந்த பின் தற்போது படத்தின் பட்ஜெட் பற்றிய உண்மையை கூறியிருப்பது தயாரிப்பாளர்கள் பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது

இனிவரும் காலங்களில் ஒரு படத்தின் தயாரிப்பு செலவு பற்றி உண்மையான தகவலை தயாரிப்பாளர்கள் கூறினாலும் இது பில்டப், உண்மையை கூறுங்கள் என்கிற விமர்சனங்கள் பொதுவெளியில் எழுப்பப்படும் இருக்கின்ற நெருக்கடியில் இது வேறு என புலம்புகின்றனர் தயாரிப்பாளர்கள்