என்னோட ரோல் மாடல் ரஜினியும், விஜய்யும்தான்” – சொல்கிறார் ‘லெஜன்ட்’ சரவணன் அருள்

“சரவணா ஸ்டோர்ஸ்’ சங்கிலித் தொடர் கடைகளின் உரிமையாளரும், பெரும் செல்வந்தருமான சரவணன் அருள் தற்போது ‘லெஜன்ட்’ என்ற தமிழ்ப் படத்தைத் தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்  நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியின்போது நாயகன் சரவணன் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது, “நான் முதன்முதலாக அறிமுகமாகும் ஒரு பான் இந்திய திரைப்படமாக இந்த ‘லெஜன்ட்’ படம் உருவாகி உள்ளது. இந்தியாவுக்கே ஓர் எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த படத்தில் ஒரு மெசேஜ் இருக்கு. அதுமட்டும் இல்லாமல் மாஸ் ஆக்ஷன், காதல், காமெடி, ரொமான்ஸ் அனைத்தும் கலந்த ஒரு ஆக்ஷன் திரைப்படம் இது.சினிமாவில் என்னுடைய பயணத்தில் இதுதான் முதற்கட்டம். இப்படத்தின் வெற்றி அடுத்த கட்டத்தை எனக்கு உருவாக்கிக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

இந்த சினிமா துறையில் என்னுடைய ரோல் மாடல் ரஜினி ஸாரும், விஜய் ஸாரும்தான்…” என்றார் ‘லெஜண்ட்’ சரவணன்.”