அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 60ஆவது திரைப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரின் நிறுவனம் தயாரிக்கிறது.
ஸ்ரீதேவி நீண்ட காலத்துக்குப் பிறகு திரையில் தோன்றிய, இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார் அஜித்.
காலங்கள் ஓடின, ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மரணமடைந்துவிட்டார்.
அதன்படி அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் திரைப்படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டு படபூஜையை நடத்தியிருக்கிறார்கள்.
நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய டீம் அப்படியே வலிமை திரைப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்கின்றனர் படக்குழுவினர்.
எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் இடம்பெற்ற ஹீரோயின் கதாபாத்திரம்வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்ற விமர்சனத்தை மட்டுமே அதிகம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.