யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென அகால மரணமடைந்தார்.

நடிகர் விவேக்கின் மரணம்திரையுலகம் கடந்து பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியைஏற்படுத்தியதுநடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் செயல்பட்டு வந்தார் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதை தனது பிரதான பணியாக மேற்கொண்டார்
இந்நிலையில் ஹைதராபத்தில் நடந்து முடிந்த சைமா விருது விழாவில் 2020-ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது தாராள பிரபு படத்திற்காக விவேக்கிற்கு வழங்கப்பட்டது.
அந்த விருதை விழா மேடையில் நடிகர்யோகிபாபு பெற்றுக் கொண்டார் ஹைதராபத்தில் விருதை பெற்ற யோகிபாபு சென்னையில் உள்ள விவேக் குடும்பத்தினரிடம் வீட்டுக்கு நேரில் சென்று ஒப்படைத்தார்

தற்போது நடிகர் விவேக்கின் மகள் விருது வாங்கி வீட்டில் வந்து ஒப்படைத்ததற்காக யோகிபாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தாராள பிரபு படத்திற்காக – 2020ம் ஆண்டில் நகைச்சுவை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை என் தந்தைக்கு வழங்கியதற்கு நன்றி சைமா.

யோகி பாபு அண்ணா அதைப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. எப்போதும் போல், ரசிகர்களுக்கு நன்றியும் கடமையும் என்று தெரிவித்துள்ளார்.