கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியனவும் நிறைவுபெற்று படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.
கொரானா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே இந்தப் படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகப்போவதாக அவ்வப்போது தகவல் வெளீயான தகவல்களைப் பொய்யாக்கி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது.
2020 டிசம்பர் மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நூறுவிழுக்காடு இருக்கை அனுமதி கிடைக்காததால் தள்ளிப்போகிறது என்றார்கள்.
இப்போது மாஸ்டர் ஈஸ்வரன் ஆகிய படங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் அடுத்த மாதம்,பிப்ரவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறதாம்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்