டாக்டர் சிவகார்த்திகேயன் முந்தி வருவது ஏன்?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்காமோகன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதி நிறைவடைந்தது.இப்படம் 2021 கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். அதன்பின் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதற்கு பின் ஏப்ரல் 2 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி கார்த்தி நடித்த சுல்தான் படம் வெளியாகும்என்றுஅதிகாரப்
பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அதற்கடுத்து தனுஷ் நடித்த கர்ணன், விஜய்சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.இதனால் திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னதாக அதாவது மார்ச் 26 ஆம் தேதியே டாக்டர் படம் வெளியாகும் என்று படக்குழு சார்பில் இன்று (பிப்ரவரி 3,2021) காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பை சிவகார்த்திகேயன் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.