வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது.
அப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.
“அன்புள்ள பிரபஞ்சமே, இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி. ஏஆர் ரகுமான் இசை, எங்கள் அடுத்த ஒத்துழைப்பிலும் எங்கள் வாழ்க்கையை மீண்டும் ஒளிரச் செய்யும் அவரது இசை. அதை நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
கௌதம் மேனன், ஏஆர் ரகுமான், சிலம்பரசன் கூட்டணி இதற்கு முன் இணைந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’ படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
படத்தின் நாயகி மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.