திரையரங்குகள் எதிர்பார்ப்பும் தயாரிப்பாளர்கள் தவிப்பும் மீண்டு வருமா தமிழ் சினிமா

கொரோனா ஊரடங்கினால் சினிமா உலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தளர்வுகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இறுதியாக, திரையரங்கம் திறப்பதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. நாளை இன்றுமுதல்(23.08.2021) 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திரையரங்குகள் இயங்கும்.

பின்னர், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு மக்கள் அச்சமின்றி வருவார்களா எனும் கேள்வி எழுகிறது. அதோடு, சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வருமா என்கிற ஐயம் திரைத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது

2020ம்ஆண்டு சுமார் 9 மாதங்கள் திரையரங்குகள் மூடியே கிடந்தன. நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கை அனுமதியுடன்தியேட்டர்கள்

திறக்கப்பட்டது
 விஜய் நடிப்பில் வெளியானமாஸ்டர் படம் தான்திரையரங்குகளை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது. சுல்தான், கர்ணன் என இரண்டு படங்களுக்கும் பார்வையாளர்கள்திரையரங்குகளுக்கு வந்துகொண்டிருந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன.
மூன்றுமாதங்கள் ஆகிவிட்டன. திரையரங்கு வெளியீட்டிற்காக திட்டமிடப்பட்டு  படங்கள் ஓடிடி வெளியீட்டுக்கு மாறி வருகின்றன. இன்று முதல் திரையரங்குகள் திறக்கும்போது அடுத்தடுத்த மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்எனஎதிர்பார்க்கப்படுகிறதகாரணம் ரஜினிகாந்த்,அஜித்குமார் படங்கள் அப்போதுதான் வெளியாக இருக்கின்றன.
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.  வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பார்வை விளம்பரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதுவிஜய்யின் மாஸ்டர் ரிலீசின் போதுதிரையரங்கிற்கு ரசிகர்கள் எப்படி கூட்டமாக வந்தார்களோ அதேபோன்ற வரவேற்பு வலிமைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமைக்கு இணையான எதிர்பார்ப்பு ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு இருக்கிறது. தமிழில் அதிக சம்பளம், அதிக வசூல் என இரண்டிலும் ரஜினி படங்களே முதலிடத்தில் இருந்து வந்த சூழல் மாறிவருகிறது

இந்த நிலையில் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி கிராமத்து கதையில் ஆக்க்ஷன், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்ப படத்தில் நடிப்பதால் அவரதுரசிகர்கள்மத்தியில் படத்திற்குஎதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் தயாராகும் என தெரிகிறது.

தமிழ் படம் இல்லையென்றாலும், தமிழ் படத்துக்கு இணையான வரவேற்பு ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு இந்தியா முழுவதும் நிலவுகிறது பாகுபலி எனும் படத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். அலியா பட், அஜய்தேவ்கன் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

பாகுபலி மாதிரியான ஒரு பிரம்மாண்ட படமாக  உருவாகியுள்ளது கே.ஜி.எப்-2 இந்தியாவின் சென்சேஷனல் நாயகனாக இருக்கிறார் கன்னட நடிகரான யஷ். இவரின் கே.ஜி.எப் சேப்டர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எப் சேப்டர் 1 படமானது டிசம்பர் 2018-ல் வெளியானது.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படம்மிகப்பெரியளவில் வெற்றி
பெற்றதுஇந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருட கடைசியில் வெளியாக இருக்கிறது. இப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
மாஸ்டர் படத்தை இயக்கிய  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இந்த வருடத்துக்குள் படத்தை முடித்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே படக்குழுவின் திட்டம்.
மக்களுக்கு இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்போனும், டிவி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களும் தான். ஊரடங்கு காலத்தில் இதன் வளர்ச்சி 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பதால் ஓடிடி தளங்கள் பல சலுகைகள அறிவித்து  மக்களை தங்களது தளங்களில் படம் பார்க்க தூண்டுகிறது
ஓடிடியில் வெளியான படங்களில் சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை படங்களை தவிர வேறு எந்த தமிழ் படமும்ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை.
இருந்தபோதிலும் இந்திய ஓ.டி.டி., சந்தையின் மதிப்பு, 10 ஆண்டுகளில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு, 11 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், 2030ல், 93,750 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

 சிறப்பான நெட்வொர்க் வசதி, டிஜிட்டல் இணைப்பு, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என, ஆர்.பி.எஸ்.ஏ., அட்வைசர்ஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓ.டி.டி., சந்தை, எதிர்வரும் வருடங்களில் இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும்.

இந்த வளர்ச்சிக்கான அடுத்த அலை, இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகரங்களிலிருந்து வரும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி; உள்ளூர் மற்றும் பிராந்திய ஓ.டி.டி., நிறுவனங்களும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன.
2025ல் ஓ.டி.டி., தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 46.27 கோடியாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது
இந்திய நுகர்வோர், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகமாக வீடியோ பார்க்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர். அதிலும் குறைந்த கால அளவிலான வீடியோக்களை, ஸ்மார்ட்போனில் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் தியேட்டர்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதார கட்டுப்பாடுகளுடன், 50 சதவீத இருக்கைகள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
திங்கள் முதல் தியேட்டர்களைத் திறந்து கொள்ள அனுமதி என்பது சனிக்கிழமை(20.08.2021) மாலைதான் தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இடைப்பட்டஒரே நாளில் தியேட்டர்களை சுத்தப்படுத்தி திறப்பதுஎன்பதுசந்தேகம்தான்.
அப்படியே திறந்தாலும் புதிய படங்களை திரையிட்டு பழகிய நகர்புற திரையரங்குகளுக்கு புதிய படங்கள் கிடையாது அதனால் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக திரையரங்குகளை திறப்பது சாத்தியமில்லாதது என்கின்றனர் தியேட்டர் வட்டாரங்களில்
நேற்று தியேட்டர்கள் திறப்பு பற்றிய அறிவிப்பு வந்ததுமே ‘பிளான் பண்ணி பண்ணணும்’ படக்குழுவினர் ‘பிளான் பண்ணி தியேட்டருக்கு வர நாங்க ரெடி, நீங்க ரெடியா’ என போஸ்டரை வெளியிட்டனர்.
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கோடியில் ஒருவன்’ படக்குழுவினர் விரைவில் திரையரங்குகளில் என்ற போஸ்டர் வெளியிட்டனர்.

விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், சசிகுமார், அருண் விஜய் ஆகியோர் நடித்து இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.

சிம்பு நடித்து தயாராக உள்ள ‘மாநாடு’, ஆர்யா நடித்து முடித்துள்ள ‘அரண்மனை-3 விஷால், ஆர்யா நடிக்கும் ‘எனிமி’, விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எப்ஐஆர்’, கங்கனா ரணவத் நடித்துள்ள ‘தலைவி’ ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படங்களாக இருக்கின்றன.

இன்னும் பல படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. சில படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற்றும் பல படங்கள் தணிக்கை சான்றிதழ் வாங்குவதற்காக காத்திருக்கின்றன. பல படங்கள் கடைசி கட்டப் பணிகளில் உள்ளன.
2021ம் வருடம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளன, அதில் 18 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஒரு வெள்ளிக்கிழமைக்கு சராசரியாக 4 படங்கள் வெளியிட திட்டமிட்டாலும் இந்த வருடத்திற்குள்ளாக மேலும் 72 படங்கள் வெளியாக மட்டுமே வாய்ப்புள்ளது வலிமை, அண்ணாத்த படங்கள் வெளியாகும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் வேறு புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காது
கொரோனா முதல், மற்றும் இரண்டாவது ஊரடங்கு காலங்களில் சுமார் 150 படங்கள் வரை வெளியிட்டிருக்க வேண்டிய வாய்ப்பை தமிழ் சினிமா இழந்திருக்கிறது இப்படங்களில் சுமார் 750 கோடி ரூபாய் அளவு செய்யப்பட்டிருக்கும்முதலீடு முடங்கியுள்ளது
முன்னணி நடிகர்கள் நடிப்பில் தயாராகி உள்ள, தயாரிப்பில் உள்ள படங்களுக்கு ஓடிடி, திரையரங்கு என இரண்டு தளங்களிலும் வியாபாரமும், வணிக மதிப்பும் தொடர்ந்து இருந்து வருகிறது இது போன்ற படங்களின் லாப சதவீதம் குறையலாம் நஷ்டம் ஏற்படாது ஆனால் நட்சத்திர முக்கியத்துவம் இல்லாத சிறு முதலீட்டு படங்களின் நிலவரம் கலவரமாகவே உள்ளது.