Related Posts
90 பிக்சர்ஸ் புரொடக்க்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை
எதிர்வரும் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இணை தயாரிப்பாளர் திருமதி சுபா சரவணன், இயக்குநர் கணேஷ் விநாயகன், இணை தயாரிப்பாளர்கள் சரண், சரத் , நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட் , நடிகைகள் ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் இளையராஜா , ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், கலை இயக்குனர் லால்குடி’ இளையராஜா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில்இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில்,
” இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும் இருக்கிறது. துன்பங்களும் இருக்கிறது.
‘தகராறு’, ‘வீர சிவாஜி’ ‘ஹைப்பர்’ ( கன்னடம் ) ‘தேன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். இதை தொடர்ந்து ‘அருள்வான்’ படத்தை இயக்கினேன். அருள்வான் படத்திற்கு முன்னதாக நான் இயக்கிய அனைத்து படத்திற்கும் நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதை சொல்லி, வாய்ப்பு கேட்டு தான் இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு இயக்குமாறு கேட்டுக் கொண்டார்.
படத்தின் தயாரிப்பாளரான S.G.சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர்.
காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம். ஆனால் தயாரிப்பாளர்தான் இப்படத்தினை பெரிதாக்கினார். இந்த படத்திற்கு பெரிய டெக்னீசியனை பயன்படுத்துங்கள். ஜீ வி பிரகாஷ் குமாரிடம் கேளுங்கள் என்றார். தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னுடைய நிறுவனத்திற்கு 90 பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவும் இல்லாமல். கமர்சியல் ஃபிலிம் ஆகவும் இல்லாமல் இருக்கும். இதனை துல்லியமாக உணர்ந்து முழுமையாக படத்தை தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர். இந்தப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள். ஆரவ் -அருள்நிதி- பேபி கிருத்திகா. இதில் பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் இப்படத்தின் கதை இருக்கும்.
இப்படத்தின் கதையின் முற்பகுதியில் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகளுக்காக போராடும் போராளியாக ஆரவ் இருப்பார். படத்தில் இரண்டாம் பகுதியில் இந்த சமூகத்திற்காக போராடும் மனிதராக அருள்நிதி நடித்திருக்கிறார்.
நடிகர் அருள் நிதியுடன் எனக்கு 14 ஆண்டு கால நட்பு இருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. எளிமையானவர். அன்பானவர். எல்லோரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். இவர் வெற்றி பெற்றவர் இவர் தோல்வி அடைந்தவர் என்ற பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர். அவருக்கு கதை பிடித்திருந்தால் இணைந்து பணியாற்றுவார். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையைக் கேட்டு விட்டு இதை நாம் அவசியம் சொல்ல வேண்டிய படம். நான் நடிக்கிறேன் என்றார்.
அருள்நிதி பகிர்ந்து கொண்டதாவது….
”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்… பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது.
இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை -கதாபாத்திரத்தை- என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது.
இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.குழந்தைகள்
கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும்- பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.
நடிகர் ஆரவ் பகிர்ந்து கொண்டதாவது…
”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்றார்.