சென்னை சிறை அடக்குமுறை பற்றிய’தி மிசா மார்க்’ ஆவணப்படம் வெளியீடு

சுதந்திரஇந்திய வரலாற்றில் தனி நபர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அவரது ரேபரேலி நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை ரத்து செய்த அலகாபாத் நீதிமன்றம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் இந்திரா காந்தி போட்டியிட தடைவிதித்தது. அதனை தொடர்ந்து உள்நாட்டு நெருக்கடி நிலை அவசர சட்டத்தை இந்திரா காந்தி பிறப்பித்தார்.
தனக்கு எதிராக செயல்பட்டவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் என 19000 க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா முழுவதும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை பயன்படுத்த மறுத்து அதற்கு எதிராக கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் காரணமாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 1976 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
தமிழகத்தில் அவசர நிலை சட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு திமுக தலைவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சென்னை சிறையில் அடைக்கப்பட்ட இன்றைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். அதனை பின்புலமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படம்
‘ தி மிசா மார்க்’.
ஆதவன் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  ‘தி மிசா மார்க்’ என்கிற ஆவணப்படம் மற்றும் ‘மிசா வடுக்கள்’ என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னையில் 25.09.2026 மாலை நடைபெற்றது’
இந்த நிகழ்வில்  திமுக மாநிலங்களவை உறுப்பினர்திருச்சி என். சிவா  முன்னிலை வகிக்க, ‘மிசா வடுக்கள்’ தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர்கி. வீரமணி வெளியிட்டார்.. அதன் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்
 கே. பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ‘தி மிசா மார்க்’ ஆவணப்படத்தை ‘தி இந்து பத்திரிகை குழுமத்தைச் சேர்ந்த என்.ராம்’  வெளியிட்டார்.
‘தி மிசா மார்க் ஆவணப்பட இயக்குனரும் மிசா வடுக்கள் நூல் ஆசிரியருமான  சு.க ஸ்ரீதரன் நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியபோது,,
“முதலில் இந்த ஏன் இந்த மிசா அப்படிங்கிற ஒரு ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும் அப்படின்னு ரொம்ப பேரு கேட்கலாம். இப்போ இருக்கிற அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. திருச்சி சிவா அண்ணனுடைய. எதிர்பாராத திருப்பம் அப்படிங்கிற புத்தகத்தை நான் வாசிச்சேன்.
50 ஆண்டுகள் கடந்த நிலையில்  சென்னை சிறையில் நடந்த மிசா கால நிகழ்வுகளை ஏன் நாம் ஆவணப்படமா எடுக்கக்கூடாது அப்படிங்கிற ஒரு சின்ன  தொடக்கம் அங்கு ஆரம்பித்தது. அதன் பிறகு நான் இந்த மிசாவுக்கெல்லாம் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கின்ற எங்கள் கட்சியினுடைய தலைவர்  ஸ்டாலின் ஐயா அவர்களுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக நான் கேட்டபொழுது தேர்தல் நேரம் நெருங்குவதால் இதைப்பற்றி அவசரப்பட வேண்டாம் என்று கூறினார்.
இதில் நான் எதுவுமே மிகைப்படுத்தி எடுக்கல. எதையும் சினிமா மாதிரி நான் காட்டணும்னு நினைக்கல. இதில் காண்பிக்கப்பட்ட அத்தனை சிறை நிகழ்ச்சிகளும் ஆசிரியர் ஐயா எனக்கு படமாக சொன்னார். அவர் சொன்னதை தான் எடுத்திருக்கிறேன். ரெண்டாவது மிசா அப்படின்னா டைரக்ட்டா சென்னை சிறைச்சாலைக்கு மட்டும் போயிட முடியாது. திமுக ஏன் முதல்ல மிசாவை எதிர்த்தது? அதற்கான காரணங்கள் என்ன? அப்படிங்கிறது மட்டும் நான் நாகநான் ஐயா கிட்டதான் கேட்டேன். ஏன்னா அன்னைக்கு வந்து திமுக தேவைப்பட்டா அனுசரிச்சு போயிருக்கலாம் அன்னைக்கு இருந்த காங்கிரஸ் மத்திய அரசில் இருந்த காங்கிரஸ் கவர்மெண்ட்டோட அனுசரிச்சு போயிருக்கலாம் இந்த கேள்வி எனக்கு உண்டு. ஆனால் ஜனநாயகத்தின் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட முக்கியமான ஆன்மா இருப்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்குகின்ற அடிப்படை உரிமைகள். அதை வந்து எடுக்கிறப்போ ஆன்மாவே உயிரோடு போறப்போ அதோட மதிப்பு புரிஞ்சு இந்தியாவிலேயே எதிர்த்த ஒரே தலைவர்  டாக்டர் கலைஞர் ஐயா மட்டும்தான்.
கலைஞருக்கு இத்தனை பையன்கள் இருக்கும்போது ஸ்டாலின் சாரை போய் ஏன் அரெஸ்ட் பண்ணாங்க அப்படின்னுட்டு நிறைய பேர் கேட்க்கிறாங்க.. அதற்கான பதிலும் இதில் இருக்கிறது. அதனால இன்னைக்கு அரசியல் புலத்துல எதிர்பாராமல் நடந்த கேள்வி கேட்கின்ற அந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாக இந்த ஆவணப்படம் இருக்கும் சென்னை சிறையில் பாதிக்கப்பட்ட மிசா போராளிகளுடைய வழிகளையும் ரணங்களையும் நாம் வரும் தலைமுறைக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தின் பெயராக நாங்கள் இந்த படத்தை இயக்கி இருக்கிறோம்” என்றார்..