கணவரை இழந்த துப்புரவுத் தொழிலாளியான அபர்ணதி,தன் ஒரேமகனை சட்டம் படிக்க வைக்கவேண்டும் என நினைக்கிறார்.ஆனால் அந்தச் சிறுவனுக்கு சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வம்.அப்போட்டியின் உச்சமான கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்லவேண்டும் என்று விரும்புகிறார்.ஆனால்,அம்மா செய்யும் வேலையைக் காரணம் காட்டி அவரைப் புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கப்பட்ட தன் மகனுக்கு தானே சதுரங்க விளையாட்டைப் பயிற்றுவித்து வெல்லவைக்க நினைக்கிறார் அபர்ணதி.அவரால் எப்படி முடியும்? அவரால் முடிந்ததா? என்கிற கேள்விகளுக்கான பதில்தான் படம்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி,ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
சிறுவன் அஸ்மின் படம் முழுக்க தன்மேல்தான் இருக்கிறதென்று உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
அபர்ணதியின் கணவராக நடித்திருக்கும் லிங்கேஷ்,பொறுப்பாக நடித்திருக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ்மேனன்,மேல்தட்டு வர்க்கத்தினரை பிரதிபலித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ் ஆகியோர் காட்சிகளை மட்டுமின்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
கொஞ்சம் விட்டால் தொய்வடைந்துவிடும் ஆபத்துள்ள திரைக்கதையை விறுவிறுப்பாக மாற்ற முயன்று வென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரஞ்சி.சி.கே.
எழுதி இயக்கியிருக்கிறார் வெற்றிச்செழியன்.அடித்தட்டு மக்கள் வாழ்வில் அள்ள அள்ளக் குறையாமல் தொடரும் துயரங்களில் ஒரு பகுதியைப் படமாக்கியிருக்கிறார்.விளையாட்