இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கிளிம்ப்ஸ், தபுவை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. படத்தில் அவர் கவுரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில், வருமான வரித்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
கடமையில் கண்டிப்புடன் இருக்கும் அவர், அதிகாரம் செலுத்துபவராகவும், ஆளுமை மிக்கவராகவும் இருக்கிறார். இந்த அதிரடியான அந்தத் தோற்றம் தபுவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது.
தெலுங்கு இயக்குநர் புரி ஜெகந்நாத் இயக்கி வரும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன் சம்யுக்தா, தபு, துனியா விஜய்குமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ள படத்துக்கு சாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்தை புரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Recover your password.
A password will be e-mailed to you.