இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ்,டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன்,மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.
அதன்பின் மே மாதம் 18 ஆம் தேதி கமல்ஹாசன் தொடங்கி வைக்க மதுரையில் படப்பிடிப்பு நடந்தது.சுமார் இருபதுநாட்கள் நடந்த முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருந்தனர்.
இந்தநிலையில்,சேயோன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது.
அங்கு ஒரு பெரிய அரங்கு அமைத்திருக்கிறார்கள்.அதில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.அங்கு மட்டுமின்றி,ஒரு மாதத்துக்கு மேலாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.
இதனிடையே இந்தப்படத்தில் நடிக்க நாம்தமிழர்கட்சித் தலைவர் சீமான் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
இந்தப்படம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன்,விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களைப் பற்றிய படம்தான் ‘சேயோன்’.இப்படம் யாருக்கும் எதிராகவோ,சாதமாகவோ இருக்காது.அனைத்துத் தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய இந்தப்படத்தில் இருக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சீமான் நடித்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றெண்ணி அவரை அணுகியிருக்கிறார்கள்.அவரும் கதை மற்றும் அவருடைய கதாபாத்திரங்களைக் கேட்டு அவை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இப்போது மதுரையில் தொடங்கியிருக்கும் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பில் அவரும் கலந்துகொள்ளவிருக்கிறார்.சுமார் பதினைந்து நாட்கள்வரை அவர் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
அவருடைய கதாபாத்திரம் என்ன என்பதை இப்போது வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.அதேநேரம்,அவரு
ஏற்கெனவே,மண்மணக்கும் வகையில் தயாராகவிருக்கும் இப்படத்தில் ஒரு சிறப்புத்தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது