விஐய் சேதுபதி- மிஷ்கின் கூட்டணியில் உருவான ‘ட்ரெயின்’ முன்னோட்டம்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ‘ட்ரெயின்’ படம் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகி படம் முடிந்த பின்னரும்வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த டீசரில், துயரம் சுமக்கும் ஒரு முரட்டு மனிதராக விஜய் சேதுபதி காணப்படுகிறார். ஜனத்திரளுடன் பயணிக்கும் ஒரு ரயிலில் பயணிக்கும் அந்த துயரத்திலிருக்கும் மனிதர், அந்தப் பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராத சிக்கலும், உயிர் பிழைப்பதற்காக சண்டையிட வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்படுவதும் காட்டப்பட்டுள்ளது.
ஓர் அதிவிரைவு வண்டியின் வேகத்தில் காட்சிகள் கோர்க்கப்பட்டுள்ள இந்த 33 விநாடி டீசர், ‘ட்ரெயின்’ பயணத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கின்றது.
‘ட்ரெயின்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மிஷ்கினே இசை அமைத்துள்ளார்.