எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற பாடகர் நடிகரான கதை

எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு சிறந்த பாடகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் ஒரு சிறந்த இயல்பான நடிகரும் கூட
ஒரு சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் ஒரு ‘கேமியோ’ கதாபாத்திரங்களில் வந்து போயிருந்தாலும் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார்.
அதன் பின் அவ்வப்போது பல படங்களில்முக்கியகதா

பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 1989ல் வந்த ‘கேளடி கண்மணி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். 285 நாட்கள் ஓடிய படம் அது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் ஓடும் அளவிற்கு ஓடி பெரிய வெற்றி பெற்ற படம்.அதன்பின் 1991ம் ஆண்டில் ‘சிகரம்’ படத்திலும் கதாநாயகனாக நடித்து படத்திற்கு இசை அமைப்பையும் செய்தார். ஆனால், படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது இசையில் வந்த பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் 1994ல் வெளிவந்த ‘காதலன்’ படத்தில் பிரபுதேவா அப்பாவாக நடித்தார். அதில் அப்பா, மகன் இருவரும் ஒன்றாக அமர்ந்து தண்ணியடித்த காட்சி அப்போது பல இளைஞர்களை ஏங்க வைத்த ஒன்றாக இருந்தது. இப்படியெல்லாம் கூட அப்பா இருப்பார்களா என ஆச்சரியப்பட்ட காட்சி அது.1995ல் வெளிவந்த ‘பாட்டுப்பாடவா’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார் எஸ்பிபி. அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும், அவருடைய நடிப்பு பேசப்பட்டது.
1997ல் வெளிவந்த ‘உல்லாசம்’ படத்தில் அஜித்தின் அப்பாவாகவும், 2000ல் வெளிவந்த ‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார் எஸ்பிபி.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடப் படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இசை சார்ந்த பல டிவி நிகழ்ச்சிகளுக்குச் சென்று அங்கு புதிய திறமைசாலிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவர்களை வாழ்த்தி இருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் போது அவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி. கமல்ஹாசனே சொந்தக்குரலில் பேசினால் கூட அது கமல்ஹாசன் குரலில்லைஎன்றுசொல்லுமளவிற்கு நான் அவருக்காகப் பேசியிருக்கிறேன் என்று சொன்னவர் எஸ்பிபி.
ஒரு பாடகர் பல மொழிகளில் பாடி சாதனை புரிந்திருந்தாலும், படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.